ஊத்துவரதன் என்னும் அரசனின் தேர் இங்கு வந்தபோது தொடர்ந்து செல்லாமல் அழுந்தியதால் இத்தலம் 'தேரழுந்தூர்' என்று வழங்கப்படுகிறது. வேதங்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டதால் மூலவர் 'வேதபுரீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர் 'வேதபுரீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் மேற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'சௌந்தர நாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், பைரவர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.
வேதங்கள், தேவர்கள், திக்பாலகர்கள், அகத்தியர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.
கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்று.
கம்பர் பிறந்த ஊர். அவரது மணிமண்டபம் கோயில் தெருவில் உள்ளது.
கோயில் இருக்கும் தெருவின் மற்றொரு முனையில் தேரழுந்தூர் ஆமருவியப்பன் பெருமாள் கோயில் உள்ளது. இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|